சீமைக்கருவேல மரங்களை அழிக்க சரியான தொழில்நுட்பம் தேவை

சீமைக்கருவேல மரங்களை அழிக்கவும், மீண்டும் எந்தக் காலத்திலும் துளிர்க்காத வகையிலான வழிகாட்டுதலும், தொழில்நுட்பமும் வழங்கப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சீமைக்கருவேல மரங்களை அழிக்க சரியான தொழில்நுட்பம் தேவை

சீமைக்கருவேல மரங்களை அழிக்கவும், மீண்டும் எந்தக் காலத்திலும் துளிர்க்காத வகையிலான வழிகாட்டுதலும், தொழில்நுட்பமும் வழங்கப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சீமைக்கருவேல மரங்களால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். நிலத்தடி நீரை மிக அதிக அளவில் உறிஞ்சுவதால், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அந்தப் பகுதி பாலைவனமாகிவிடும் ஆபத்து உள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, இந்த மரங்களை அகற்றும் பணியில் இளைஞர்களும், பொதுமக்களும் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது. இவற்றை அகற்றுவதால் பயனில்லை. அழிப்பதால்தான் பயன். இதுகுறித்த முழுமையான புரிதல் மக்களிடையே இல்லை.
அடியோடு வெட்டி வீழ்த்தினால் அம்மரங்கள் அழிந்து விடும் என்ற எண்ணத்தில் அவற்றை மக்கள் வெட்டி சாய்த்து வருகின்றனர். ஆனால், மீண்டும் அவை வளர்ந்துவிடும்.
சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீமைக் கருவேலமரங்களை பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக அழித்திருக்கின்றன. அதுபோல, இலைகளை உதிர்க்க வைக்கும், மரத்தின் சாறை உறிஞ்சி பட்டுப்போக வைக்கும் பூச்சிகளைப் பயன்படுத்தி இந்த மரங்களை முழுவதுமாக அழிக்க முடியும்.
இல்லையெனில், பொக்லைன் இயந்திரத்தால் மரத்தை வேரோடு அகற்றிவிட்டு அந்த இடத்தில் -வீட்சைடு- என்ற கலைக்கொல்லியைத் தெளிப்பதால் தடுக்கலாம்.
எனவே, இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com