ஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் இருந்தபோது பேசாதது ஏன்? ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் இருந்தபோது பேசாதது ஏன்? ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
ஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் இருந்தபோது பேசாதது ஏன்? ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

முதல்வர் பதவியில் இருந்தவரை வாய் திறக்காமல் இருந்தவர், பதவியைப் பறித்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:-
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நாடு முழுவதும் ஊழல் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் அமைந்திருப்பதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை எதிர்பார்க்கின்ற இளைய தலைமுறையினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான், "ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது. அவரது படத்தையும், பெயரையும் பயன்படுத்தி அரசு சார்பில் விளம்பரங்களை அளிக்கக் கூடாது. அவர் பெயரில் அமைந்துள்ள அரசு திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' என்று தலைமைச் செயலரிடம் கோரிக்கை மனுவை திமுக சார்பில் அளித்தேன். இதற்காக விமர்சனங்களைத் தொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை அதிமுக கொண்டாடுவதோ, அவருடைய படங்களைப் பயன்படுத்துவதோ, அவர்களின் உரிமையைச் சார்ந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவரின் படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதையும், அரசு பணத்தில் விளம்பரங்கள் தருவதும் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும். இது சட்ட விரோதமானதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேர் எதிரானதுமாகும்.
இதை திமுக சுட்டிக்காட்டினால், அரசியல் சுயநலத்துக்காகச் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சிக்கிறார். இப்போது அக்கறை காட்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com