திருச்சியை புறக்கணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

லாபகரமாக இயங்கி வந்த நிலையிலும், திருச்சி - மலேசியா மற்றும் சென்னை உள்ளிட்ட உள்நாட்டில் இயக்கப்பட்ட விமானங்களை நிறுத்தி, திருச்சி நிலையத்தை புறக்கணித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
திருச்சியை புறக்கணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

லாபகரமாக இயங்கி வந்த நிலையிலும், திருச்சி - மலேசியா மற்றும் சென்னை உள்ளிட்ட உள்நாட்டில் இயக்கப்பட்ட விமானங்களை நிறுத்தி, திருச்சி நிலையத்தை புறக்கணித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
இந்திய அரசு விமான நிறுவனங்களான இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்ட பின்னரும், திருச்சி விமான நிலையத்தைப் பொருத்தவரையில் அரசு விமானங்கள்தான் பிரதானமாக இருந்து வந்தன.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்புக்கு பின்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா, துபை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்கி வந்தது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே திருச்சி விமான நிலையத்தை படிப்படியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கைக்கு மட்டுமே விமானங்கள் இயங்கி வந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலைய அந்தஸ்து பெறுவதற்கு முன்னரே சிங்கப்பூர், மலேசியா மற்றும் குவைத், துபை உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வந்தது ஏர் இந்தியா நிறுவனம். அனைத்து விமானங்களும் சுமார் 90 சதவிகித இருக்கைகள் நிரம்பிய நிலையில் லாபகரமாகவே இயங்கி வந்தன.
பின்னர் படிப்படியாக திருச்சி வந்து செல்லும் விமானங்களை குறைக்க தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.ஷார்ஜாவுக்கு இயங்கி வந்த டிரிப் நிறுத்தப்பட்டது. (தற்போது அந்த டிரிப் கடந்த சில மாதங்களாக 9 ஆண்டுகளுக்குப் பின் இயக்கப்பட்டு வருகிறது) அதேபோல மலேசியா திருச்சிக்கு இருக்கைகள் கிடைக்காத நிலையில் இயங்கி வந்த சென்னையிலிருந்து திருச்சி வழியாக மலேசியாவுக்கு சென்று வந்த டிரிப்பையும் ரத்து செய்தது. இதில் திருச்சி வழியாக புஜைரா, ராஸ் அல்கைமா உள்ளிட்ட அரபு நாடுகள் டிரிப்புகளும் அடங்கும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மலேசிய நாட்டு விமான நிறுவனமான ஏர்ஏசியா நிறுவனம் திருச்சி -மலேசியா இடையே போக்குவரத்தை தொடங்கி தற்போது தினசரி 3 விமானங்களை இயக்கி லாபம் அடைந்து வருகிறது. மேலும் புதிதாக மலிண்டோ நிறுவனமும் தினசரி இரு விமானங்கள் வீதம் மலேசியாவுக்கு தினசரி 5 விமானங்கள் இயக்கி வருகிறது. இவ்வாறு லாபகரமாக இயங்கி வந்த தடத்தில் விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்ததற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதற்கு பதிலாக சென்னையிலிருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு ஒரு விமானத்தையும், எதிர் மார்க்கத்தில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை வழியாக மலேசியாவுக்கு (வாரத்தில் 4 நாள் மட்டும்) புதிய வழித்தடத்தில் விமானத்தை இயக்கி வந்தது. கடந்த பிப். 14-ஆம் தேதியுடன் அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தை ரத்து செய்ததன் மூலம் திருச்சி - சென்னை இடையே இருந்து வந்த ஒரே அரசு விமான போக்குவரத்தும் ரத்தானது.
மேலும் திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு பிப். 19-ம் தேதியிலிருந்து (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ஒரு விமானம் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்மூலம் திருவனந்தபும் திருச்சி இடையே உள்நாட்டு போக்குவரத்து தொடங்கும் நிலையில் சிங்கப்பூருக்கு கூடுதல் வாராந்திர விமானப் போக்குவரத்து கிடைக்கும் என நினைத்த நிலையில் அந்த விமானமும் இயக்கப்படவில்லை. தாற்காலிகமாக அந்த போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஷார்ஜா மற்றும் குவைத் நாடுகளுக்கு இயங்கி வந்த விமானங்களை நிறுத்தியதன் காரணமாக திருச்சி திருவனந்தபுரம், திருச்சி கோழிக்கோடு, திருச்சி கொச்சி, திருச்சி சென்னை ஆகிய வழித்தடங்களிலும், இவற்றின் எதிர்மார்க்கத்திலும் இருந்து வந்த உள்நாட்டுப் போக்குவரத்தும் ரத்தானது. கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் பயணிகளை சுமர்ந்து சென்ற ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் லாபகரமாக இயங்கிய திருச்சி விமான நிலையத்தை புறக்கணித்து விமானங்களை நிறுத்தியதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமே உண்மை.
இதுகுறித்து திருச்சி நிலைய மற்றும் விமான நிலைய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகளிடம் விவரம் கேட்கையில், இவை குறித்து பதில் அளிக்க எங்களுக்கு தகுதியில்லை, தலைமை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

நோக்கம் புரியவில்லை

திருச்சியிலிருந்து வாரம் 109 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 28 அதாவது தினசரி 4 வீதம் 28 விமானங்கள் உள்நாட்டு சேவைக்கும் பிற அனைத்தும் வெளிநாடுகளுக்கும் இயக்கப்படுகின்றன.
திருச்சி மண்டலத்திலிருந்து சிங்கப்பூர், துபை, மலேசியா, ஷார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருவதால், எப்போதும் இந்த விமானங்களில் இடம் கிடைக்காது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் இவற்றை ரத்து செய்த நோக்கம் புரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com