கேரள நடிகை விவகாரம்: கைதான இருவரை கோவை அழைத்து வந்து விசாரணை

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை, கோவைக்கு நேரில் அழைத்து வந்து கேரள காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை, கோவைக்கு நேரில் அழைத்து வந்து கேரள காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை, கோவைக்கு நேரில் அழைத்து வந்து கேரள காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை, கோவைக்கு நேரில் அழைத்து வந்து கேரள காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. இவர் கொச்சியில் படப்பிடிப்பு முடிந்த பின்பு, திருச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த 17ஆம் தேதி இரவு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் அவரது காரை வழிமறித்தது.
பின்னர், வேனில் இருந்த 5 பேர் கார் ஓட்டுநரைத் தாக்கி விட்டு, நடிகையை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது, அவருக்குப் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில், நெடும்பாசேரி காவல்துறையினர் மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். காவல் துறையின் விசாரணைக்குப் பின்னர், நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, பல்சர் சுனில், விஜேஷ் ஆகியோர் கோவைக்கு 19ஆம் தேதி தப்பி வந்து, பீளமேடு ஸ்ரீராம் நகரில் வசிக்கும் சுனிலின் நண்பரான கண்ணூரைச் சேர்ந்த சார்லி என்பவரது அறையில் இருந்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த கேரள தனிப்படை காவல்துறையினர் பீளமேடு வருவதற்கு முன்னரே, சார்லியுடன் தங்கி இருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வத்தின் இருசக்கர வாகனத்தில் இருவரும் 21ஆம் தேதி தப்பிச் சென்றனர்.
தப்பிச் சென்ற இருவரும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 23ஆம் தேதி ஆஜராகச் சென்றபோது தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆலுவா டி.எஸ்.பி. பாபுகுமார் தலைமையிலான தனிப்படையினர் 30 பேர், பல்சர் சுனில், விஜேஷை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை பீளமேடு வந்தனர். அங்கு அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தினர். மேலும், தலைமறைவாக உள்ள சார்லி குறித்து, அவருடன் தங்கி இருந்த செல்வத்திடம் விசாரணை நடத்தினர்.
அவர்களது அறையில் இருந்து ஒரு கையடக்க கணினி, ஒரு செல்லிடப்பேசி ஆகியவற்றை கேரளகாவல் துறையினர் பறிமுதல் செய்ததுடன், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலும் இருவர் குறித்தும் விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com