நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வலை, மீன்கள் மற்றும் உபகரணங்களை சனிக்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.

நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வலை, மீன்கள் மற்றும் உபகரணங்களை சனிக்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம், ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த அன்பு மகன் சிவசந்திரன் (29) என்பவருக்குச் சொந்தமான படகு, கோடியக்கரை படகுத்துறையில் இருந்து வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்றது.
இதில், ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த அன்பு மகன் குணபால் (20), கார்த்திகேசன் மகன் கேசவன் (40), நம்பியார்நகர் சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் (40), பெருமாள்பேட்டை ராமசாமி மகன் சக்திபாலன் (20), சீனிவாசன் மகன் ஆறுமுகம் (60) ஆகியோர் இருந்தனர்.
இந்த 5 மீனவர்களும், கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து சனிக்கிழமை பகல் மீன்பிடிக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு 5 படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எனக் கருதப்படும் 15-க்கும் மேற்பட்டோர், படகில் ஏறி மீனவர்களை தடியால் தாக்கி அச்சுறுத்தினராம்.
மேலும், மீனவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, 2 செல்லிடபேசிகள், ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், மீன்பிடி வலைகளை பறித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com