நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் போராட்டம்: முன்னாள் அமைச்சர் ரகுபதி விரட்டியடிப்பு

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, உரிமை மீட்புக் குழு,
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் போராட்டம்: முன்னாள் அமைச்சர் ரகுபதி விரட்டியடிப்பு

புதுக்கோட்டை:  நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, உரிமை மீட்புக் குழு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் புதுகோட்டை திலகர் திடலில் நடைபெற்று வருகிறது.
அப்போது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், தற்போதைய திமுக எம்எல்ஏவுமான ரகுபதி கலந்துகொள்வதற்காக பந்தலுக்குள் வந்து அமர்ந்தார்.
உடனே உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் அவரிடம், நீங்கள் மத்திய அமைச்சராக முன்பு இருந்தபோதுதானே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு மக்களைப் பற்றியும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் சிந்திக்காமல், இப்போது அரசியல் செய்வதற்காக இங்கு கலந்துகொள்ள வருகிறீர்களா என்று கோபமாக பேசியதுடன் நீங்களாக இங்கிருந்து கிளம்பிடுவதுதான் நல்லது என்று எச்சரித்தனர்.
இதையடுத்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று நினைத்து அங்கிருந்து ரகுபதி எம்எல்ஏ கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com