மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் கிடையாது: எச்.ராஜா

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால் மத்திய அரசு செயல்படுத்தாது என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் கிடையாது: எச்.ராஜா

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால் மத்திய அரசு செயல்படுத்தாது என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால், அதை மத்திய அரசு செயல்படுத்தாது. 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். குஜராத், மகாராஷ்டிரத்தில் இதுபோன்ற எரிவாயு திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.
மோடி அரசுக்கு எதிராக தேச துரோக சக்திகள்: ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தியதுபோல் தமிழ் பிரிவினைவாதிகள், ஜிகாதிகளும் போராட்டத்தைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். விவசாயிகள் இவர்களின் கருத்துகளுக்கு பலியாகிவிடக் கூடாது. தீய சக்திகள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி குளிர்காய நினைக்கிறார்கள்.
அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகச் செயல்பட நினைக்கின்றனர். அதற்கு பலியாகி விடாமல் இருக்க வேண்டும். இத்தகைய தேச துரோக சக்திகளை பாஜக முழுமையாக அழிக்கும். இந்தத் திட்டம் தொடர்பாக நெடுவாசல் மக்களை நேரில் சந்தித்து பேசுவேன். அவர்களிடத்தில் நாட்டின் முன்னேற்றம், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து விளக்குவேன்.
பொறுத்திருந்து பார்ப்போம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடு குறித்து பாஜக மட்டுமல்லாமல், மக்களும் உற்று கவனித்து வருகின்றனர். அவரது ஆட்சியை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
முன்னதாக, ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் நடைபெற்ற விழாவில் "இந்தியா: அன்று முதல் இன்று வரை' என்ற நூலை எச்.ராஜா வெளியிட, அதன் முதல் பிரதியை பிரம்ம கான சபை தலைவர் நல்லி குப்புசாமி பெற்றுகொண்டார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, நடிகர் ராஜேஷ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், சொற்பொழிவாளர் ஆர்.பி.என், வானதி பதிப்பகப் பதிப்பாளர் வானதி ராமநாதன், உரத்த சிந்தனை தலைவர் உதயம்ராம், வழக்குரைஞர் பி.எச்.வினோத்பாண்டியன், கவிஞர்கள் கார்முகிலன், விஜயகிருஷ்ணன், நூலாசிரியர்கள் எம்.குமார், ஜி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com