ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கக் கூடாது: சி. மகேந்திரன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கக் கூடாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.

திருச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கக் கூடாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 பாஜக தலைமையிலான மத்திய அரசு, நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்துவிட்டு, ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினராக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தபோதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 1991-ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நெடுவாசல் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ 2006-ஆம் ஆண்டுதான் தேர்வானார். எனவே, உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது குற்றம்சுமத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மண், விவசாயம், மனிதனுக்கு ஊறு விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்கு பதிலாக, வேலையில்லா பட்டதாரிகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அரசு உதவி செய்தால், இந்தியாவுக்கே மின்சாரம் வழங்கலாம். இத்திட்டத்துக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீத்தேன் திட்டத்தை ஆதரிக்காமல் கைவிட்டார். அதே போல, தற்போதுள்ள முதல்வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கக் கூடாது. மேலும், தமிழக அரசு குழு ஒன்றை நியமித்து, ஹைட்ரோ கார்பனால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றார் மகேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com