100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவை கோரி சாலை மறியல்: 500 பேர் கைது

நூறு நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவை கோரி, கீழையூர் ஒன்றியத்தில் 10 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தொடர்பாக, 500 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கீழையூர் அருகேயுள்ள மேலப்பிடாகையில் சாலை மறியலில் ஈடுபட்டோர்.
கீழையூர் அருகேயுள்ள மேலப்பிடாகையில் சாலை மறியலில் ஈடுபட்டோர்.

நூறு நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவை கோரி, கீழையூர் ஒன்றியத்தில் 10 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தொடர்பாக, 500 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும், 2015-16 ஆம் ஆண்டு பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ. 15 ஆயிரமும், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும் வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கான ஊதியத்தை ரூ. 400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கீழையூர் ஒன்றியத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நீடுர் பாலம் அருகே விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் என். பன்னீர்செல்வம் தலைமையிலும், பாலக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத் தலைவர் கே. கிருஷ்ணன் தலைமையிலும், பெரியதும்பூரில் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.எம். உத்திராபதி தலைமையிலும், மேலப்பிடாகையில் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் டி. பால்சாமி தலைமையிலும், மீனம்பநல்லூர் பாலம் அருகே சிபிஎம் கிளைச் செயலர் ஏ. ரவி தலைமையிலும், வாழக்கரையில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ. முருகையன் தலைமையிலும், திருக்குவளையில் ஒன்றியப் பெருந்தலைவர் பி. வைரன் தலைமையிலும், சீராவட்டம் பாலம் அருகே கிளைச் செயலர் கே. கல்யாணசுந்தரம் தலைமையிலும், கீழையூர் கடைத் தெருவில் விவசாய சங்க ஒன்றியச் செயலர் ஏ. ராமலிங்கம் தலைமையிலும், திருப்பூண்டியில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கே. சித்தார்த்தன் தலைமையிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
மறியலின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 315 பெண்கள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com