உள்ளாட்சித் தேர்தல்: திமுக மாவட்டச் செயலர்கள் இன்று ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்: திமுக மாவட்டச் செயலர்கள் இன்று ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
இதில், கட்சியின் அமைப்புரீதியிலான 65 மாவட்டச் செயலர்களும் பங்கேற்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதுடன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com