சசிகலாவுக்கு கிடுக்கிப் பிடி போடும் பரப்பன அக்ரஹார மத்திய சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது.
சசிகலாவுக்கு கிடுக்கிப் பிடி போடும் பரப்பன அக்ரஹார மத்திய சிறை


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது.

பிப்ரவரி 15ம் தேதி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை சந்திக்க, தினந்தோறும் வழக்குரைஞர்கள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் என வந்த வண்ணம் இருந்தனர். ஆரம்பத்தில் இதனை கட்டுப்படுத்தாத சிறை நிர்வாகம், மற்ற கைதிகள் இது குறித்து பிரச்னை செய்ததும் விழித்துக் கொண்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதியை, ஒரு வாரத்துக்கு 3 முறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும். அதுவும் அதிகபட்சம் 1 மணி நேரம் மட்டுமே. ஆனால், சசிகலா சரணடைந்து மறுநாள் அதாவது பிப்ரவரி16ம் தேதி முதல் தினந்தோறும் அவரை ஏராளமானோர் சந்தித்து வந்தனர். அதுவும் 5 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், சசிகலாவின் உறவினர்கள் மட்டும் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது. அதிமுக நிர்வாகிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில் தான், கடந்த வாரம் பெங்களூர் சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதும்.

இதே போல, பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் சயனைட் மல்லிகா என்ற தொடர் கொலைக் குற்றவாளி அடைக்கப்பட்டிருந்தார். இது குறித்து சமூக தளங்களிலும் செய்திகள் பரவின. அவர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை என்பதால், அவரால் சசிகலாவுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்று காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

இதையே காரணம் காட்டி, பெங்களூர் சிறையில் இருந்து சென்னையில் உள்ள சிறைக்கு தன்னை மாற்றும்படி கோரிக்கை வைக்கலாம் என்று சசிகலா தரப்பினர் நினைத்திருந்த நிலையில், திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி, மல்லிகா பெல்காம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com