நியாய விலைக் கடை: பொருள்கள் கிடைக்காததை கண்டித்து விரைவில் திமுக போராட்டம்

நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததைக் கண்டித்து, திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நியாய விலைக் கடை: பொருள்கள் கிடைக்காததை கண்டித்து விரைவில் திமுக போராட்டம்

நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததைக் கண்டித்து, திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
அதிமுக ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் சீர்குலைந்துள்ளது. ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி முழுமையாக கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக 10 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்து, அதையும் உருப்படியாக வழங்குவதில்லை. முதல் வாரத்தில் கிடைக்கும் சில அத்தியாவசியப் பொருள்கள் இரண்டாவது வாரத்தில் கிடைப்பதில்லை. மேலும், பருப்பு, பாமாயில் போன்றவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. பொருள்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் என்றால், திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பாஜக போராட்ட அறிவிப்பு: நியாய விலைக் கடைகளில் பொருள்கள் கிடைக்காவிட்டால், அதைப் பெற்றுத் தர பாஜக மகளிரணி போராட்டம் நடத்தும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையிலும் மேலும் கூறியதாவது:-
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் கடந்த இரு மாதங்களாக சரியாக கிடைக்கவில்லை.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் வழியாக, பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் ரூ.2,730 கோடி அளவுக்கு ஆண்டுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இந்தத் திட்டத்தால் 3.6 கோடி மக்கள் பயன் பெறுவர்.
போலி குடும்ப அட்டைகளால் ஒழித்தால், தவறான நபர்களுக்கு தவறான மானியத்துடன் கூடிய பொருள்கள் கிடைப்பது தடுக்கப்படும். நல்ல எண்ணத்தோடு கொண்டு வரப்பட்ட திட்டத்தை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் தவறால் உணவுப் பொருள்கள் கிடைக்காத நிலையை, உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைத்துப் பேசுவது தவறாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com