நேர்மை, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக காவலர்கள் திகழ வேண்டும்: முதல்வர் நாராயணசாமி

நேர்மை, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக காவலர்கள் திகழ வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நேர்மை, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக காவலர்கள் திகழ வேண்டும்: முதல்வர் நாராயணசாமி

நேர்மை, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக காவலர்கள் திகழ வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளயில் இன்று நடந்த பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும், காவல்துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது எங்கள் அரசின் முதன்மையாக கொள்கையாகும். புதுவையில் அமைதி நிலவ வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். சொத்துக்கள், உடமைகளுக்கு பாதுகாப்பு தருவதை காவல்துறை உதவியோடு முழுமையாக நிறைவேற்றி உள்ளோம்.

புதுவை சுற்றுவாவில் சிறந்து விளங்குகிறது. சட்டம் ஒழுங்கு பராமரிக்கததால் முன்பு தொழிற்சாலைகள் வெளியே சென்று விட்டன. 

கடந்த 8 மாநிலங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பல மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஆன்மீக மண்டலம், பாரம்பரியம், பொழுதுபோக்கு சுற்றுலாவை ஊக்குவித்துள்ளோம். காவல்துறையின் பங்கு பெரியதாகும்.

சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தால் தான் வளர்ச்சி கிடைக்கும். 

அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக சுற்றுலா பயணிகளும் நிம்மதியாக உணர்ந்து வருகின்றனர். 303 பேர் பயிற்சி நிறைவு பெற்று பொறுப்பை ஏற்க உள்ளனர்.

கவனத்துடன் புதுவை மாநிலத்தில் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நேர்மையான முறையில் செயல்பட்டு தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறைந்திருந்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பு தருவதை பெண் காவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

புதுவையை முன்மாதிரி மாநிலமாக மாற்ற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு தருவதில் 16 மாநிலங்களில் புதுவைக்கு 3-து பரிசு கிடைத்தது. 8 மாதங்களில் காவல்துறை, அதிகாரிகள் துணையோடு நிர்வாகத்தை சீரமைத்துள்ளோம். காவல்துறை பொதுமக்கள் நண்பன் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். 
சில குறைபாடுகள் உள்ளன. அவற்றையும் தீர்க்க நடவடிக்கை எடுப்போம். 

மத்திய உள்துறை புதுவை காவல்துறையை நவீனப்படுத்த நிதியுதவி அளிக்க வேண்டும்.

பயிற்சி நிறைவு செய்யும் காவல்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, நேர்மையாக செயல்பட்டு, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக திகழ வேண்டும் என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com