புதுச்சேரியில் 98 பெண்கள் உள்பட 303 காவலர்கள் பயிற்சி நிறைவு விழா

புதுச்சேரி கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் 21-வது பிரிவைச் சேர்ந்த 130 காவலர்கள், இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையின் 173 பேர் என மொத்தம் 303 காவலர்கள் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.

புதுச்சேரி கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் 21-வது பிரிவைச் சேர்ந்த 130 காவலர்கள், இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையின் 173 பேர் என மொத்தம் 303 காவலர்கள் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.

கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் காவல்துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்படும் காவலர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 21-வது பயிற்சி கடந்த 28.1.16-ல் தொடங்கப்பட்டது. மொத்தம் 98 பெண் காவலர்கள், 32 ஆண் காவலர்கள் என 130 பேருக்கு பயிற்சி தரப்பட்டது.

அடிப்படை பயிற்சியோடு, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நாள்தோறும் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள், அவை குறித்து நடைபெறும் புலன் விசாரணை, குற்றவாளிகள் தொடர்பான விவரங்கள் பதிவு செய்தல், அவை தொடர்பான பராமரிப்பு பதிவேடுகள், பொதுமக்களுடன் நல்லுறவு, புகார்தாரரை விசாரிக்கும் விதம் குறித்த பயிற்சி தரப்பட்டது. 

மேலும் மீனவ கிராமங்களான வீராம்பட்டினம், காலாப்பட்டு, சோலை நகர் போன்ற பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 3 நாள்கள் தங்கி இருந்து நாள்தோறும் ஏற்படும் பிரச்னைகள், குறித்தும், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பயிற்சியும் மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முயற்சியால் பயிற்சிக் காவலர்கள் புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பையும் நேரில் கண்டு களித்தனர். பின்னர் திகார் சிறைக்கும் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

பின்னர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தடவியல் ஆய்வகத்துக்குச் சென்று அதன் செயல்பாடுகள், இறுதி அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி பெற்றனர். மேலும் அவசர கால பேரிடர் பயிற்சி, நீச்சல் பயிற்சியும் கற்றுத்தரப்பட்டது.

ஓட்டுநர் பயிற்சி உரிமம்
மேலும் கார், இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி தரப்பட்டு 34 பேருக்கு இலகு ரக வாகன ஓட்டும் உரிமம், 75 பேருக்கு இரு சக்கர வாகன ஓட்டும் உரிமங்களும் தரப்பட்டன. 

இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவு
அதே போர் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையின் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 173 ஆண் காவலர்களும் சென்னை அடுத்த ஆவடி சிஆர்பிஎப் மையத்தில் பயிற்சி பெற்றனர்.

பயிற்சி நிறைவு
இவர்களின் பயிற்சி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை காவல்துறை விளையாட்டரங்கில் நடைபெற்றது. டிஜிபி சுனில்குமார் கௌதம் வரவேற்றார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமை தாங்கினார். முதல்வர் வி.நாராயணசாமி சிறப்புரை ஆற்றினார்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காரம் அஹிர் பயிற்சிக் காவலர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். அமைச்சர் கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, தில்லி பிரதிநிதி ஜான்குமார், வளர்ச்சி ஆணையர் நரேந்திரகுமார், ஐஜி கண்ணன் ஜெகதீசன், சீனியர் எஸ்.பிக்கள் ராஜிவ் ரஞ்சன், வி.சந்திரன், எஸ்.பிக்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com