மணப்பாடு கடலில் ஆய்வு மேற்கொண்ட டோர்னியர் சிறிய ரக விமானம்.
மணப்பாடு கடலில் ஆய்வு மேற்கொண்ட டோர்னியர் சிறிய ரக விமானம்.

மணப்பாடு கடலில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் கடலோர காவல் குழுமத்தினர் 13 வயது சிறுமியை சடலமாக மீட்டதை அடுத்து

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் கடலோர காவல் குழுமத்தினர் 13 வயது சிறுமியை சடலமாக மீட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
உடன்குடி அருகே படுக்கபத்து அழகம்மன்புரம் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் சுற்றுலாவுக்காக மணப்பாடு கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அன்று மாலையில் கடற்கரையில் இருந்த படகில் ஏறி, அவர்கள் கடலுக்குள் சென்றனர். சிறிது தொலைவு சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்கள் கடலில் முழ்கினர். இதையடுத்து கரை
யில் இருந்த மீனவர்கள்,பொதுமக்கள் கடலுக்குள் சென்று அவர்களை மீட்டு குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம்,திருச்செந்தூர் தனியார் மருத்துவமனை,திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். இதில் ஜெயராமன்-முத்துசெல்வி தம்பதி, முருகேஷ்வரி அவரது 9 வயது மகன் ஆகாஷ், க.முத்துலட்சுமி (20), வ.சுரேந்திரன்(10),கா.சுகன்யா (35) ஆகியோர் உயிரிழந்தனர்.
சம்பவம் மாலையில் நடைபெற்றதால் இரவு முழுவதும் கடலோர காவல் குழுமத்தினர், வனத்துறையினர் கடலில் வேறு எவரேனும் உள்ளனரா எனபது குறித்து தீவிரமாக தேடி வந்தனர். மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், எஸ்.பி அஸ்வின் கோட்னீஸ் மற்றும் அதிகாரிகள் கடற்கரைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் கடலில் இருந்து ஆறுமுகக்கொடி என்பவரது 13 வயது மகள் அபிநயா என்ற சிறுமியின் சடலத்தை கடலோரக் காவல் குழுமத்தினர் மீட்டனர். ஏற்கெனவே, இச்சிறுமியின் தாய் உஷாராணி (45), தம்பி சுந்தரேசன் (7) ஆகியோர் இறந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. மணப்பாடு கடலோரத்தில் விரைவுப் படையினர், அதிவிரைவுப் படையினர்,உடன்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவன், சுப்புலட்சுமி, குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் முகாமிட்டு ஆóய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com