மண் எடுக்க எதிர்ப்பு: செல்லிடப்பேசி கோபுரத்தில் இளைஞர்கள் ஏறி போராட்டம்

தனியார் மண் குவாரியில் அதிக ஆழத்தில் மண் எடுப்பதைக் கண்டித்து, சீர்காழியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் 2 இளைஞர்கள் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து, திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்.
சீர்காழியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்.

தனியார் மண் குவாரியில் அதிக ஆழத்தில் மண் எடுப்பதைக் கண்டித்து, சீர்காழியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் 2 இளைஞர்கள் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து, திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி வட்டம், ஆலங்காடு ஊராட்சியைச் சேர்ந்த இளந்தோப்பு கிராமத்தில் மதிமாறன் என்பவர், அரசு அனுமதியுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தின்படி சவுடு மண் எடுக்கும் குவாரி நடத்தி வருகிறார்.
இந்தக் குவாரியில் அரசு விதிமுறைகளின்படி 3 அடி ஆழத்துக்குள் மண் எடுக்கப்படாமல், விதிகளை மீறி 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது.
மேலும், ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை குவாரி உரிமையாளர்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதை மீட்க வலியுறுத்தியும், கிராம மக்கள் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் சுபாநந்தினி, சீர்காழி வட்டாட்சியர் மலர்விழி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த க. செல்வகுமார் (22), செ. சதீஸ்குமார் (24) ஆகிய இருவரும் சீர்காழி கச்சேரி சாலையில் உள்ள தனியார் வணிக வளாக மாடியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய காகித துண்டுகளை கீழே வீசினர். இதைப் பார்த்த அப்பகுதி கடை உரிமையாளர்கள் சீர்காழி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சீர்காழி டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீஸார், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) ரமேஷ் ஆகியோர் அங்கு சென்று செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com