மெரீனாவில் போராட்ட அறிகுறி: 1,500 போலீஸார் குவிப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து, சுமார் 1,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து, சுமார் 1,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த சில நாள்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போராட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்தப்போவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடற்கரையின் கலங்கரை விளக்கம் தொடங்கி நேப்பியர் பாலம் வரை வழக்கமான 500 போலீஸாருடன் கூடுதலாக ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டனர். மாறுவேடத்தில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், காவல் துறை அதிகாரிகளும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 மாணவர்கள் கைது: இதற்கிடையே, திருவள்ளுவர் சிலை அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து...: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி, மெரீனாவில் ஜனவரியில் ஒரு வாரம் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனால் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், போராட்டத்தின் கடைசி நாளன்று ஒரு தரப்பினர் வெளியேற மறுத்து, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாகத் தெரிவித்தனர்.
இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும், வன்முறையும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் போராட்டம், நிகழ்ச்சிகள் நடத்த போலீஸார் தடை விதித்தனர்.
மேலும், அங்கு சுமார் 500 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், மீண்டும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் மெரீனாவில் அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com