சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம்: ஆந்திர முதல்வருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்

தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம்: ஆந்திர முதல்வருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்


சென்னை: தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால், சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தீர்க்க, உடனடியாக கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர - தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.

தமிழகத்துக்கு குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரம் வடகிழக்குப் பருவ மழைதான். ஆனால், இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால், சென்னைக்கு 57% அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னையில் உள்ள குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க கிருஷ்ணா நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

எனவே, ஆந்திர அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி, தமிழகத்துக்கு உரிய நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com