மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில் இணைந்தது தமிழக அரசு!

மாநில மின் பகிர்மான  நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'உதய்' மின் திட்டத்தில் இன்று தமிழக அரசு இணைந்தது.
மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில் இணைந்தது தமிழக அரசு!

புதுதில்லி: மாநில மின் பகிர்மான  நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'உதய்' மின் திட்டத்தில் இன்று தமிழக அரசு இணைந்தது.

தில்லியில் இன்று நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் மத்திய அரசு சார்பாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலும், தமிழக அரசு சார்பாக மாநில மின்துறை அமைச்சர் தங்கமணியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த திட்டத்தில் இணைந்துள்ளதன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ.11,000 கோடி நிதியாக கிடைக்கும். மேலும்  முதலாமாண்டில் மின் பகிர்மான நிறுவனத்திற்கான கடனில் 75% மாநில அரசு ஏற்கும். இரண்டாமாண்டு அது 50% ஆகவும், முன்றாம் ஆண்டில் அது 25% ஆகவுமிருக்கும்.

தொடங்கவுள்ள முதலாம் ஆண்டில் கடன்சுமையானது ரூ.2500 கோடி அளவுக்கு குறையும் என்று செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com