வாசகர்களைக் கவரும் அரசியல் நூல்கள்

சென்னையில் நடைபெற்று வரும் 40-ஆவது புத்தகக் கண்காட்சியில், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்கள் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன.
வாசகர்களைக் கவரும் அரசியல் நூல்கள்

சென்னையில் நடைபெற்று வரும் 40-ஆவது புத்தகக் கண்காட்சியில், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்கள் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன.
சென்னையில் 40-ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 700 அரங்குகளை அமைத்துள்ளனர். இதில் ஒவ்வொரு அரங்கிலும் பல விதமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை வாங்கவும் பார்க்கவும் பலர் வந்தவண்ணம் உள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் எனப் பல தரப்பினரும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
அரசியல் புத்தகங்கள்: அறிவியல், உரைநடை, குழந்தைகளுக்கான புத்தகங்கள், இலக்கிய நூல்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கான நூல்கள் என கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் பரவிக் கிடக்கின்றன. இந்தாண்டு அதிகப்படியாக சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த நூல்களே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் இடதுசாரி, வலதுசாரி அரசியல் கொள்கைகளை வலியுறுத்தும் பல நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அரசியல் ஆய்வு நூல்களும் உள்ளன. இந்தாண்டு பல பதிப்பகங்கள் தற்போதைய பிரச்னைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளன.
இந்த நூல்கள் பலரையும் கவர்ந்து வருகின்றன. வெளிநாட்டு அரசியல், மத்திய கிழக்கு அரசியல், திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், வலதுசாரி அரசியல், கம்யூனிஸ்ட் அரசியல் என பல அரசியல் புத்தகங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் அரசியல் ஆய்வு நூல்களாக இருப்பதால், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக நூல்கள்: அரசியல் சார்ந்த நூல்கள் என்றால், சமூகம் சார்ந்த பிரச்னைகளையே பெரும்பாலும் பேசும். அந்த வகையில் சாதி, மதம், பெண் விடுதலை போன்ற சமூகம் சார்ந்த பல நூல்களும் கண்காட்சியில் உள்ளன. இந்த புத்தகங்கள் அரசியல் களத்தில் இயங்கி வருவோருக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளதால் பலர் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், சமூகப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்காற்றி வருவோரும் தற்போதைய சமூகத்தை அறிய இந்த நூல்களை வாங்குகின்றனர். இதன் காரணமாக, பல தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல், சமூகம் சார்ந்த நூல்கள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அதே வேளையில், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த நூல்களே அதிக அளவில் புத்தகக் கண்காட்சியில் குவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக என்.சி.பி.எச்., பாரதி புத்தகாலயம், புலம், எதிர், கிழக்கு, கீழைக்காற்று, அலைகள் போன்ற பதிப்பகங்கள் அதிகமான எண்ணிக்கையில் இந்த புத்தகங்களை கொண்டு வந்துள்ளன.
புத்தகக் கண்காட்சியில் அவரவர் தாங்கள் செயலாற்றும் தளம் சார்ந்த நூல்களை வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் அரசியல், சமூக தளங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆர்வலர்களிடையே புத்தகக் கணகாட்சியில் அரசியல், சமூக நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com