மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்

விவசாயிகளின் முக்கிய பண்டிகையான மாட்டுப் பொங்கல் விழா, திருவள்ளூர் மாவட்டத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாட்டுப் பொங்கலையொட்டி, திருவள்ளூரில் மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசிய சிறுவர்கள்.  (வலது) ஈக்காட்டில் பூஜைக்குப் பின்னர், மாடுகளுக்கு வாழைப்பழங்களை அளித்த விவசாயி.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. பலர் தங்களது உடமைகள், கால்நடைகளை இழந்து தவித்தனர்.
இதனால், 2016 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, வர்தா புயல் பாதிப்பு ஆகியன இருந்தாலும், பொங்கல் பண்டிகை சிறப்பாகவே கொண்டாடப்பட்டது.
குறிப்பாக விவசாயிகளின் முக்கிய பண்டிகையான மாட்டுப் பொங்கலையொட்டி கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய மூக்கனாங் கயிற்றை மாற்றி அழகு படுத்தினர்.
பின்னர், மாட்டின் கொம்புகள், மாட்டு வண்டிகளில் பலூன்களை கட்டிக் கொண்டு, குழந்தைகளுடன் நகர் வலம் சென்று மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com