யாருக்கோ விலை போய் விட்டார் கே.பி.முனுசாமி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காட்டமான பதில்!

அதிமுகவை கைப்பற்ற திவாகரன் முயல்வதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியிருப்பது அவர் யாருக்கோ விலை போய் விட்டார் என்பதை காட்டுவதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்,மணியன் ...
யாருக்கோ விலை போய் விட்டார் கே.பி.முனுசாமி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காட்டமான பதில்!

சென்னை: அதிமுகவை கைப்பற்ற திவாகரன் முயல்வதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியிருப்பது அவர் யாருக்கோ விலைபோய் விட்டார் என்பதை காட்டுவதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்,மணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைப் பொறுத்தவரை தற்போது கட்சியின் எந்த ஒரு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இல்லாதவர்கள் எல்லாம் அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். மேலும் கட்சியின் சின்னத்தையும், கொடியையும் தாங்களே கைப்பற்றியவர்கள் போல பேசுகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று காலை அளித்த பேட்டியொன்றில் குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று அவரது க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்பொழுது அவர் கூறியதாவது:

அதிமுகவில் கே.பி.முனுசாமி நிறைய பொறுப்புகளை வகித்தவர். நடைமுறைகளை அறிந்தவர். அபப்டியிருக்கும் பொழுது இப்படியான கருத்துக்களை அவர் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரனாக செயல்படுவதைக் காட்டுகிறது. 

அதிமுகவைப் பொறுத்த வரை இப்படியான கருத்துக்களை அவர் கொண்டிருந்தால் அவர் பேச வேண்டியது கட்சித்தலைமையிடம்தானே ஒழிய வெளியே பொது இடங்களில் அல்ல. அதிமுகவில் அப்படி ஒரு நடைமுறையே கிடையாது.  

திவாகரனை பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை.அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு கட்சி இரண்டாக உடைந்தது.  அப்பொழுது ஜெயலலிதாவுக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்தன. அந்நிலையில் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றி பயணம் செய்த பொழுது அவருக்கு பாதுகாப்பபாக இருந்து செயல்பட்டவர் திவாகரன்தான். இதற்காக அவருக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டன. தலையில் கூட காயம் ஏற்பட்டது.

அதிமுக என்னும் இயக்கத்தின் வளர்ச்சியை மனதினில் கொண்டு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை கூறலாம். அதனை வரவேற்கிறோம். அப்படிதான் திவாகரனும் கூறியிருக்கிறார். ஆனால் முனுசாமி பேசுவதையெல்லாம் பார்க்கும் பொழுது அவரை பின்னல் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்று தெரிகிறது. அவர் யாரிடமோ விலை போய் விட்டார் என்றும், வேறு பாதையில் செயல்பட முடிவு எடுத்து விட்டார் என்றும் கோரலாம்.

இவ்வாறு ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com