ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்: நடிகர் சூர்யா

நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்: நடிகர் சூர்யா

நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுககு ஆதரவாக பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் சூர்யா போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் சூர்யா கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்னைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராடத் தூண்டிய அனைவருக்கும் நன்றி.
தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு. மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப் பிரசாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது.
அமைதியான வழியில் உரிமைகளை நிலைநாட்ட போராடுகிற அனனவருக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.
வெற்றி பெறும்: மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம் என அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com