பீட்டாவுக்கு தடை கோர திமுகவுக்கு தகுதி இல்லை

பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரும் தகுதி திமுகவுக்கு இல்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பீட்டாவுக்கு தடை கோர திமுகவுக்கு தகுதி இல்லை

பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரும் தகுதி திமுகவுக்கு இல்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தைக் கலைத்து விட்டு தமிழகத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளித்து புதிய வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்படுவதற்கு இந்த அமைப்புகள்தான் காரணம் என்பது ஒருபுறமிருக்க இவற்றின் செயல்பாடுகள் இந்திய நலனுக்கு எதிராக உள்ளன. சென்னை கிங் ஆராய்ச்சி நிலையத்தில் குழந்தைகளுக்காக நோய்த்தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் ஆய்வில் குதிரைகளும், எய்ட்ஸ் தடுப்பு மருந்துக்கான ஆய்வில் 40 குரங்குகளும் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த நிலையில், அதை மேனகா காந்தி உதவியுடன் பீட்டா தடுத்தது. இதனால் மருந்து ஆராய்ச்சித் துறையில் இந்தியா சாதனை படைப்பது தடுக்கப்பட்டது.
விலங்குகளை படுகொலை செய்யக் கூடாது என்று உபதேசம் செய்யும் பீட்டா அமைப்பு, கடந்த 14 ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை மிகவும் கொடூரமாக கொலை செய்திருக்கிறது.
இந்திய விலங்குகள் நலவாரியத்தின் செயல்பாடுகளும் சமூகத்துக்கு நன்மை பயக்கும் வகையில் இல்லை. இவற்றை வைத்துப் பார்க்கும்போது பீட்டாவை தடை செய்ய வேண்டும், விலங்குகள் நல வாரியத்தை கலைக்க வேண்டும் என்பது சரியானதாகும். ஆனால், அதைச் சொல்லும் தகுதி திமுகவுக்கு உண்டா?
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றோர் இருந்தபோது பீட்டாவைத் தடை செய்யும்படி பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com