புதுவரவில் நல்வரவு: 1801 டாக்டர் மு.ராஜேந்திரன்

இந்திய சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் தொடங்கியவர் பூலித்தேவன். அதன் பிறகு எண்ணற்ற மன்னர்கள், குறிப்பாக தென்தமிழக மன்னர்கள் பலர் ஆங்கிலேயனை எதிர்த்து வீரமரணம் அடைந்துள்ளனர்.
புதுவரவில் நல்வரவு: 1801 டாக்டர் மு.ராஜேந்திரன்

இந்திய சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் தொடங்கியவர் பூலித்தேவன். அதன் பிறகு எண்ணற்ற மன்னர்கள், குறிப்பாக தென்தமிழக மன்னர்கள் பலர் ஆங்கிலேயனை எதிர்த்து வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஆனால், எந்தப் பாடப் புத்தகத்தை எடுத்தாலும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு வடஇந்தியாவுடனேயே தொடங்குகிறது. தென்னிந்திய தியாகிகளின், குறிப்பாக தமிழக தியாகிகளின் தியாகம் வரலாற்று நூல்களில் பலவாறு இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது நமது ஏக்கம்.
பல வரலாற்று நூல்கள் பூலித்தேவனையும், கட்டபொம்மனையும் மேற்கோள்கள்கூட இல்லாமல் வடஇந்திய தியாகிகளுடனேயே சுருங்கி விடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டு விடுதலை வீரர்களின் வரலாற்றை தேடித் தேடி ஆய்வு செய்துள்ளார் ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு.ராஜேந்திரன்.
தான் ஆய்ந்தறிந்த தகவல்களை வெறும் வரலாற்று புத்தகமாக மட்டுமல்லாமல், ஒரு நாவல் வடிவில் எழுதியுள்ளார். அதன் தலைப்பு "1801'. குறிப்பிட்ட ஆண்டை தலைப்பாக வைத்த ராஜேந்திரன், அந்த ஆண்டையொட்டிய ஆங்கிலேயேர்களின் வாழ்க்கை முறை, நமது தட்பவெட்ப சூழலால் அவர்களின் மகளிர் பட்ட பாடுகள், கிழக்கிந்திய கம்பெனியின் சூழ்ச்சிகள், ஆங்கிலோ இந்திய இனம் தோன்றிய வரலாறு ஆகியவை குறித்து பதிவு செய்துள்ளார்.
அதேபோல கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், ஊமைத்துரை என துரோகத்தால் வீழ்ந்த வீரர்களின் வாழ்க்கையும் ஆவணப்படுத்தியுள்ளார். இந்த 1801 நூலை அகநி வெளியீடு பதிப்பித்து புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்திய சுதந்திரப் போரின் வேர்களை அறிந்து கொள்ள நினைப்போருக்கு வரலாற்று நூலாகவும், நாவல் பிரியர்களுக்கு ஒரு நாவலாகவும் இருப்பதால் இந்தாண்டு இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விலை. ரூ.500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com