முதல் பெண் நாவலாசிரியர் வை.மு. கோதைநாயகி அம்மாள்

தமிழின் நாவல் இலக்கிய வரலாறு மாயூரம் வேதநாயகத்தின் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில் இருந்து தொடங்குகிறது.
முதல் பெண் நாவலாசிரியர் வை.மு. கோதைநாயகி அம்மாள்

தமிழின் நாவல் இலக்கிய வரலாறு மாயூரம் வேதநாயகத்தின் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில் இருந்து தொடங்குகிறது. அவருக்கு பின்னர், பல ஆண் எழுத்தாளர்கள் பல நாவல்களை எழுதியுள்ளனர். பெண் எழுத்தாளர்கள் வெகு சிலரே.
இன்றைய காலத்தில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இருந்தாலும், குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளர்கள் குறைவு. இலக்கியத்தில் பெண்கள் புறக்கணிப்படும் நிலையில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துலகில் பிரபலமாக இருந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். அவரே தமிழின் முதல் பெண் நாவல் ஆசிரியர். 1901-ஆம் ஆண்டு பிறந்த கோதைநாயகி, முறையான கல்வி பெறாதவர். ஆனாலும் கதைகள், நாடகங்களை தனது தோழி உதவியுடன் எழுதினார்.
பின்னர் எழுத கற்றுக் கொண்டு, தானே எழுத ஆரம்பித்தார். இவரின் முதல் நாவல் "வைதேகி' என்பதாகும். இந்திய விடுதலை போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவரது நாடக நூல்களான அருணோதயம், தயாநிதி போன்றவை அக்காலத்தில் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றிருக்கின்றன. இவரது "ராஜமோகன்', "அனாதைப்பெண்' நாவல்கள் திரைப்படமாக தயாரிக்கப்
பட்டுள்ளன.
இவர், கடந்த 1960-இல் தனது 59 வயதில் சென்னையில் காலமானார். மறைந்து 77 ஆண்டுகள் ஆன பிறகும் எழுத வரும் பல பெண் எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாக இன்றும் திகழ்கிறார் தமிழின் முதல் பெண் நாவலாசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com