ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தனியார் பள்ளிகள் இன்று செயல்படாது

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜன.20) அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்படாது

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜன.20) அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்படாது என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு எங்கள் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது.
இதற்காக சங்கத்தின் அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை செயல்படாது.
மேலும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பள்ளி வாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களும் ஆதரவளிக்கும் நிலையில், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com