ஜல்லிக்கட்டு: மெரீனாவில் அடிப்படை வசதி: கராத்தே தியாகராஜன் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சென்னை மாநகராட்சி செய்து கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின்

ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சென்னை மாநகராட்சி செய்து கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி, சென்னை மெரீனா கடற்கரையில் தொடர் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி போராடி வருகின்றனர். இந்த நிலையில் மண்டல அதிகாரிகள், வருவாய்த் துறை, சுகாதார த்துறை அதிகாரிகளுடன் உடனடியாக போராட்டக் குழுவினரைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதி, அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்.
குடிநீர், உணவு மற்றும் கழிப்பிட வசதிகளை அங்கு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், மாநகராட்சி மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் குழு என அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com