அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கிவைக்கிறார்

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமையே (ஜன. 22) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கிவைக்கிறார்

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமையே (ஜன. 22) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தாமே நேரில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
அலங்காநல்லூர் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைப்பர் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றி

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வழிசெய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பிரதமருக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளதுடன், நன்றி தெரிவித்து கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு பெரிதும் உதவியையும், ஆதரவையும் அளித்த தங்களுக்கு தமிழக மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம், தமிழக மக்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் காக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் 213-ன் படி குடியரசுத் தலைவரின் தகுந்த ஒப்புதலுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கின்ற இந்த அவசரச் சட்டத்தின் மூலமாக மாநிலத்தில் அனைத்து அத்தியாவசியமான பாதுகாப்பு அம்சங்களுடன் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொலைபேசியிலும் பிரதமரிடம் பேசி தனது நன்றிகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஆளுநரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com