ஜல்லிக்கட்டுக்கு எந்த தடை வந்தாலும் தமிழக அரசு முறியடிக்கும்: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக முறியடிக்கும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எந்த தடை வந்தாலும் தமிழக அரசு முறியடிக்கும்: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக முறியடிக்கும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின்படி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காக முதல்வர் பன்னீர்செல்வம் மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவர் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் தெரிவித்தததாவது:

முன்னர் தெரிவித்திருந்தபடி ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காக இங்கு வருகை தந்துள்ளேன்.ஆனால் அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் போது அங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.    

மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிஅளித்துள்ளது. அதே போல காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதனையொட்டி பல இடங்களில் இன்று வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் சீறிப் பாய்ந்துள்ளன.   

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம்தான் நிரந்தர தீவும் கூட. இது தொடர்பான சட்ட முன்வரைவு விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக முறியடிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com