ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டை: ஆளுநர் உரையில் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உரையாற்றிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உரையாற்றிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் அவர் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் விவரம்:-
கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மதுல், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தோடு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வேறுபாடின்றி அரிசி வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
ஸ்மார்ட் ரேஷன் அட்டை: பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்த அதன் செயல்பாடுகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் அளிக்கப்படும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாநில அரசு வலியுறுத்திய நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில், உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்தது. இந்த முடிவின் மூலமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை வலுப்படும். அதேசமயம், வீட்டு இணைப்பு உள்ளோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லாத மின்சாரம் ஆகிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தடையற்ற, தரமான மின்சாரம் தமிழகத்தில அனைவருக்கும் தொடர்ந்து கிடைப்பதற்காக அரசு எடுத்துள்ள முயற்சிகளால், புதிய முதலீடுகளை ஈர்க்கவல்ல முதன்மை மாநிலமாக தமிழகம் தொடர்ந்து திகழும்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவும்: தமிழகத்தில் கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் 8, 875 கிலோமீட்டர் கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்கும் அதிகரிக்கப்பட்ட நிதிப் பகிர்வுகள், ஊரக-உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை வலுப்படுத்தி, ஊரகக் கட்டமைப்பு-அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த உதவும்.
ஐந்தாவது நிதிக் குழு: புதுவாழ்வுத் திட்ட செயல்முறையைத் தழுவி அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறுமையை ஒழிக்கவும், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசு உறுதி பூண்டுள்ளது. எளிதாக கடனுதவி பெற்று சிறு தொழில்களை உருவாக்கிட, சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற வறுமை ஒழிப்புக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கட்டமைப்புகள் வங்கிச் சேவைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
ஐந்தாவது மாநில நிதிக் குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. இந்த அறிக்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செயல் அறிக்கை சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் வைக்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com