பெங்களூரு-காரைக்கால் ரயில் 5 நாள்களுக்குப் பிறகு மீட்பு

சேலத்தில் போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் 5 நாள்களுக்குப் பிறகு மீட்டு எடுத்துச் செல்லப்பட்டது.
சேலத்தில் கடந்த 5 நாள்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலை மீட்டு எடுத்துச் செல்லும் பணியின் போது என்ஜினை சுற்றி பாதுகாப்பிற்கு நிற்கும் ரயில்வே பாதுகாப்புப் போலீஸார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி, சேலத்தில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதில் 19ஆம் தேதியன்று பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் அரசு மருத்துவமனை அருகே பெரியார் மேம்பாலத்தின் கீழ் போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த போராட்டத்தின் போது, ரயில் மீது ஏறிய சிலர் ரயில் என்ஜினில் பல்வேறு பாகங்களைச் சேதப்படுத்தினர். பைலட் அறையில் இருந்த மின்னணு சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், டீசல் குழாய்கள் உடைக்கப்பட்டன. பயணிகள் இருக்கைகள் கிழிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் திங்கள்கிழமை காலை போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தி ரயிலை மீட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரின் பாதுகாப்பில் இந்த ரயிலை பின்பக்க என்ஜின் மூலம் இழுத்துச் சென்று மார்க்கெட் ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை செய்த பணிமனை ஊழியர்கள், பின்னர் அதனை ரயில்வே கோட்டத்துக்கு கொண்டு சென்றனர்.
சேத மதிப்பு ரூ.68 லட்சம்: இதனிடையே, ரயில் என்ஜின் சேத மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என்றும், 16 ரயில் பெட்டிகளின் சேத மதிப்பு ரூ.48 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த சேத மதிப்பு ரூ.68 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com