அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட தடியடி: நீதி விசாரணை கோரி பொதுநல மனு தாக்கல்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராடியவர்கள் மீது ஜனவரி 23 அன்று  தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை கோரி..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட தடியடி: நீதி விசாரணை கோரி பொதுநல மனு தாக்கல்!

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராடியவர்கள் மீது ஜனவரி 23 அன்று  தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக  ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர், அமைதியான வழியில் போராடியவர்கள் மீது கடந்த ஜனவரி 23 அன்று  காலை போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்த சம்பவத்தில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறி, அது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கனகவேல் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

அந்த மனுவில் அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது போலீசார் அடக்குமுறையை பிரயோகித்தாகவும், சிலர் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக நீதிவிசாரணை கோரியுள்ள அவர், போலீஸ் தாக்குதலில் காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதே போல சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் போலீஸாரின் அணுகுமுறை குறித்து சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது    குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com