இன்று முதல் தோசை, சாம்பார், காபிக்கு கூடுதல் விலை: காரணம் ஜிஎஸ்டிதான்

இன்று முதல் தோசை, சாம்பார், காபிக்கு கூடுதல் விலை: காரணம் ஜிஎஸ்டிதான்

இனிமேல், காபி அல்லது டீ அல்லது தண்ணி இதில் எதைக் குடிக்கலாம் என்று நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டியது இருக்கும். காரணம் ஜிஎஸ்டி.

சென்னை: இனிமேல், காபி அல்லது டீ அல்லது தண்ணி இதில் எதைக் குடிக்கலாம் என்று நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டியது இருக்கும். காரணம் ஜிஎஸ்டி.

முன்பெல்லாம் சுவைக்காகவே காபி அல்லது டீயை நாம் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இனி விலையும் நம் தேர்வுக்கான காரணிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.

பால் விலை அப்படியே இருந்தாலும், அதில் போடப்படும் டீ மற்றும் காபி விலை உயருகிறது. கிட்டத்தட்ட தண்ணி விலையும் கூட.

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் காபி மற்றும் டீ விலை 5% அதிகரிக்கும். தண்ணி விலையும் நிச்சயம் அதை விட அதிகமாக இருக்கலாம். ஹோட்டலில் விற்பனையாகும் சாம்பார் விலை கூட  உயருகிறது.

நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், சில கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டுவிட்டன.

பணமதிப்பிழப்பு விவகாரம் போலவே ஜிஎஸ்டியும் மக்களுக்குப் புரிய சில காலம் ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள். சாம்பாருக்கு முக்கியமான பருப்பு மற்றும் புளி விலை உயருகிறது. 

அதாவது பருப்பு வகைகள், பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் விற்பனையானால், அதற்கு 5% விலை அதிகரிக்கும். அதே போல, பாக்கெட் செய்யப்பட்டு விற்பனையாகும் புளியின் விலை 12% அதிகரிக்கும். எனவே சாம்பார் விலை தாறுமாறாக எகிறப்போகிறது. இது மட்டும் அல்ல, ரவா, மைதா விலையும் 5% உயரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com