சினிமாவுக்கு ஜிஎஸ்டி: ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன்? என டி. ராஜேந்திரன் கேள்வி

சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன் என்று டி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சினிமாவுக்கு ஜிஎஸ்டி: ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன்? என டி. ராஜேந்திரன் கேள்வி


சென்னை: சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன் என்று டி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜேந்திரன்,  உங்களை வாழ வைத்த சினிமாவுக்காக குரல் கொடுக்காதது ஏன்? ரஜினிகாந்த் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், திரையுலகத்துக்கே குரல் கொடுக்காத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா? சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக கமலஹாசன் குரல் கொடுத்தார். ஆனால், ரஜினிகாந்த் மவுனம் காத்து வருகிறார்.

அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி விதிக்கப்பட வேண்டும். சினிமா டிக்கெட் விலையை உயர்த்தும் விஷயத்தில் முரண்படுகிறேன் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com