குட்கா விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டசபையில் குட்கா விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குட்கா விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டசபையில் குட்கா விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினார்.

குட்கா விவகாரம் குறித்து முதல்வர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டதால், மீண்டும் அது குறித்து விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  

பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "குட்கா விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறகிறது என்று முதல்வர் கூறி இருந்தார். ஆனால், குற்றச்சாட்டுக்கு உட்பட்ட டி. ஜி. பி ராஜேந்திரனுக்கு பதவு உயர்வு வழங்கப்பட்டது பற்றி கேட்டோம். ஆனால், அதுகுறித்து பேச சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்டார். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று தெரிவித்தார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com