ஜி.எஸ்.டி. விதித்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும்: விற்பனையாளர்கள் சங்கம்

ஜி.எஸ்.டி விதித்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் என தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி விதித்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் என தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நடைமுறைக்கு வந்தது. இந்த வரி விதிப்பு முறை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 600 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. சென்னையில் 600 க்கும் மேற்பட்ட நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஜி.எஸ்.டி யிலிருந்து பெட்ரோல், டீசலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாறாக ஜி.எஸ்.டி. விதித்திருந்தால் அதனை வரவேற்போம். இந்த வரிவிதிப்பின் காரணமாக ஒரு சில பொருட்களின் விலைகளில் ஏற்ற,இறக்கம் காணப்படுகின்றன. ஜி.எஸ்.டி விதித்திருந்தால் பெட்ரோல், டீசலின் விலை குறைந்திருக்கும். இந்த விலைக் குறைப்பின் காரணமாக மற்ற பொருட்களின் விலை கணிசமாக குறைந்திருக்கும் என்றார் அவர்.
தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கீதா மேத்யூ கூறியதாவது: பெட்ரோல் டீசலை பொருத்தவரை லூப் வகை எண்ணெய்களுக்கு மட்டும் 28 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர்சாதன வசதி கொண்ட கார்களுக்குப் பயன்படுத்தப்படும் கூலன்ட் எண்ணெய் வகைகளுக்கும், பிரேக் ஆயில் வகைகளுக்கும் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. டிஸ்டில்டு வகை நீருக்கு 5 முதல் 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வாட் வரி உள்பட மூன்று நான்கு வகையான வரிகள் கட்டப்பட்டு வந்தன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி வரவேற்கத்தக்கது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com