வழக்கு இருந்தாலும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்

நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேரவையில்
வழக்கு இருந்தாலும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்

நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேரவையில் வலியுறுத்தினார்.
வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் திமுக உறுப்பினர் அன்பழகன் (கும்பகோணம்) பேசியது : அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தீர்கள். அதில் தற்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது: நிதி மேலாண்மை விவகாரத்தில் சட்டப்பேரவையில் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் உண்டா என்பதை அறிந்துகொள்வதற்காகவே நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளோம். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
அதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியது: நிதிமேலாண்மை குறித்து சட்டப்பேரவைக்கு அதிகாரம் இருக்கிறதா, நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்றத்துக்குச் சென்றதாக அமைச்சர் கூறுகிறார்.
விவசாயிகள் மீது அக்கறை உள்ள உண்மையான அரசாக இருந்தால் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யலாம். நிதி மேலாண்மையில் யாருக்கு அதிகாரம் என்பதை அதற்குப்பிறகுகூட உச்சநீதிமன்றத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com