சென்னை சென்ட்ரலில் ஏடிஎம்களுக்கு கடும் தட்டுப்பாடு: அலைக்கழிக்கப்படும் பயணிகள்!

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து போகும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல அடிப்படைக் குறைபாடுகளில் ஏடிஎம் தட்டுப்பாடும் ஒன்று.
சென்னை சென்ட்ரலில் ஏடிஎம்களுக்கு கடும் தட்டுப்பாடு: அலைக்கழிக்கப்படும் பயணிகள்!


சென்னை: தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து போகும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல அடிப்படைக் குறைபாடுகளில் ஏடிஎம் தட்டுப்பாடும் ஒன்று.

தென்னிந்தியாவின் மிக முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றான சென்னை சென்ட்ரலில், ஏடிஎம் தட்டுப்பாட்டால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்துக்குள் சுமார் 11 வங்கிகளின் ஏடிஎம்கள் அமைந்துள்ளன. ஆனால்,அவற்றில் 3 ஏடிஎம்கள் மட்டுமே வழக்கமாக திறந்திருக்கும். இதனால், அந்த 3 ஏடிஎம்களிலும் எப்போதும் நீண்ட வரிசை இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதிலும் சில சமயங்களில் அந்த மூன்று ஏடிஎம்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ பழுதானால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும்.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அவசரத் தேவைக்காக பணம் எடுக்க ஒவ்வொரு ஏடிஎம்மாக ஏறி இறங்குவதும் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளை கேட்டபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஏடிஎம்களும் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வேக்கும் வங்கிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்டவை.
 
ஆரம்பத்தில் ரயில்வேக்கு வங்கிகளிடம் இருந்து உரிய கட்டணம் செலுத்தப்படவில்லை. அதனால் ஏடிஎம்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்து நிலுவைகளும் கட்டப்பட்டுவிட்டன. மேலும், 5 முக்கிய வங்கிகளின் ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டன. அந்த இடங்களுக்காக மறு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அந்த 5 வங்கி ஏடிஎம்களைத் தவிர மற்ற ஏடிஎம்கள் ஏன் மூடியே இருக்கின்றன என்ற கேள்விக்கு, அதுபற்றி வங்கிகளிடம்தான் கேட்டறிய வேண்டும் என்ற பதில் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com