கதிராமங்கலம் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்: திருச்சி சிவா

கதிராமங்கலம் பிரச்னை குறித்து வரும் 18-ஆ ம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.
கதிராமங்கலம் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்: திருச்சி சிவா

கதிராமங்கலம் பிரச்னை குறித்து வரும் 18-ஆ ம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் பகுதி மக்களை சனிக்கிழமை இரவு சந்தித்து அங்குள்ள பிரச்னைகள் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி பெண்கள் கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிர்வாகம் வெளியேற வேண்டும். மண்ணுக்காகப் போராடி கைதானோரை உடனடியாக விடுவிக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க வேண்டும் என கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற போராட்டங்களை குறித்து விளக்கினர்.
பின்னர் அப்பகுதி மக்களிடையே திருச்சி சிவா பேசியது:
உங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடைய அச்சமானது உங்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டுக்கே உண்டானது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது ஆளும் அரசின் கடமை. இந்த ஊரில் உள்ள குடிநீரை நீங்கள் என்னிடம் கொடுத்துள்ளீர்கள். இதை நான் அவசியம் எடுத்துச் செல்வேன். 18 -ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கதிராமங்கலம் பிரச்னையை எழுப்புவதோடு, அங்கு இக் குடிநீரை கொண்டு சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் காட்டித் தீர்வு காணும் வகையில் செயல்படுவேன்.
நிலம் என்பது ஆளும் அரசின் உரிமையாகும். இதில் எந்த திட்டம் வரக் கூடாது என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த அரசு இதுகுறித்து எதுவும் பேசாமலிருப்பது வேதனை தருகிறது. அதோடு காவல் துறையைக் கொண்டும் அடக்க முயல்கிறது.
இப்பகுதி மக்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்த ஒற்றுமை சீர்குலையக் கூடாது. உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்.
வரும் 10  -ஆம் தேதி அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிந்தேன். அந்தப் போராட்டத்துக்கு திமுகவும் ஆதரவு தரும் என்றார் சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com