ஜி.எஸ்.டி.எதிரொலி: முடங்கும் அபாயத்தில் ஃபர்னிச்சர் தயாரிப்பு தொழில்

மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள கட்டில், பீரா, சோஃபா, மேஜை உள்ளிட்ட ஃ பர்னிச்சர் பொருட்களுக்கு 28 சதவீதம் சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி) விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழில் கடும் பாதிப்பைச் சந்திக்கும்
ஜி.எஸ்.டி.எதிரொலி: முடங்கும் அபாயத்தில் ஃபர்னிச்சர் தயாரிப்பு தொழில்

மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள கட்டில், பீரா, சோஃபா, மேஜை உள்ளிட்ட ஃ பர்னிச்சர் பொருட்களுக்கு 28 சதவீதம் சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி) விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழில் கடும் பாதிப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் பொருள்களாக இருக்கும் இவற்றின் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஸ்டீல் மற்றும் மரச்சாமான்கள்( ஃபர்னிச்சர் ) தயாரிப்பு தொழிலில் 2,000 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 2 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதில் இந்தத் தொழிலுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபர்னிச்சர் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களை வாங்குவது குறைந்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலிவான சீனத் தயாரிப்பு ஃபர்னிச்சர் பொருள்களை நோக்கி மக்கள் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
முன்பு, ஸ்டீல் மூலப் பொருள்கள் மீது உள்ளீடு வரி 5 சதவீதமும், மரச்சாமான்கள், சோஃபா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது உள்ளீடு வரி 14.5 சதவீதமும் விதிக்கப்பட்டது.
இந்த மூலப்பொருள்களை வைத்து, ஃபர்னிச்சர்கள் தயாரித்து வெளியே (விற்பனைக்கு) வரும்போது, வெளியீடு வரி அல்லது விற்பனை வரி அதே அளவு இருந்தது. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) யில் உள்ளீடு வரி 18 சதவீதமாகவும், வெளியீடு வரி 28 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதனால் ஃபர்னிச்சர் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. உதாரணமாக, 4 அடி கொண்ட ஸ்டீல் கட்டில் வரியுடன் சேர்ந்து ரூ.6,300 ஆக இருந்தது. இப்போது ஜி.எஸ்.டி.உடன் சேர்த்து ரூ7,680 ஆக உயர்ந்துள்ளது.
கட்டில், பீரோ விலை உயர்வு: ஜி.எஸ்.டி.}க்கு முன்பு, ஸ்டீல் பீரோ வரியுடன் சேர்ந்து ரூ.10,000}க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது இதன் விலை ஜி.எஸ்.டி.யுடன் 12,800 ஆக அதிகரித்துள்ளது. ரூ.20,000 ஆக இருந்த சோஃபா தற்போது ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.25,600 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டீல் மேஜை ரூ.4,500 இருந்து ரூ.5,500 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல, இருக்கை (சேர்) ரூ.2,000}இல் இருந்து ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய காலத்தில் மக்களின் அத்தியாவசியப் பொருள்களாக ஸ்டீல் மற்றும் மரச்சாமான் (ஃபர்னிச்சர்) பொருட்கள் விளங்குகின்றன. இவற்றின் விலை உயர்வால், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கல்யாண வீட்டில் மணப்பெண்ணுக்கு சீதனமாக கொடுப்பதற்காக சேர், கட்டில், பீரோ, மேஜை உள்ளிட்ட பொருள்களை வாங்குவது வழக்கம். இப்போது ஜி.எஸ்.டி. காரணமாக இதற்கான செலவு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மக்கள் ஒருபுறம் விலைச் சுமையை சந்திக்கும் நிலையில், இந்தத் தொழிலை செய்து வரும் பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள்(குடிசைத்தொழில்) தங்கள் தொழிலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஃபர்னிச்சர் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் ஜி.சந்தானபதி கூறியது:
சாதாரணமாக வீட்டில் கட்டில், பீரோ இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு அத்தியாவசிய தேவையாக ஃபர்னிச்சர் பொருள்கள் உள்ளன. இவற்றை ஆடம்பரப் பொருளாக கருதி, வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஃபர்னிச்சர் பொருள்கள் விலை உயர்ந்து, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சுமை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சிறிய குடிசைத் தொழில் செய்யும் சிறிய நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இத்தொழிலை காக்கவும், மக்கள் மீது விலை உயர்வு சுமையைக் குறைக்கவும் இவ்வரி உயர்வை குறைக்க வேண்டும் என்றார் அவர்.
உள்நாட்டு தொழில் முடங்கும்: தமிழ்நாடு மாடூலர் ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் டி.மகேந்திரன் கூறும்போது, ''ஜி.எஸ்.டி. வரி காரணமாக உள்நாட்டு வியாபாரம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் தயாரிப்பும் திட்டத்தின் கீழ், இங்கு தயாரித்து மக்களுக்கு வழங்குகிறோம். ஆனால், ஜி.எஸ்.டி. உயர்வு காரணமாக, பர்னிச்சர் பொருள்களை மக்கள் வாங்குவது குறைய வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து ஃபர்னிச்சர் பொருள்கள் இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, சீனாவில் இருந்து மலிவான ஃபர்னிச்சர்கள் வரும் நிலை ஏற்படும். பன்னாட்டு நிறுவனங்கள் வருகை அதிகரித்து, உள்நாட்டு தொழில்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 28 சதவீதம் வரி உயர்வை குறைக்க வேண்டும் என்றார் அவர்.

மிழ்த் திரையுலக மூட நம்பிக்கைகளை உடைத்தவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் அவர் மேலும் பேசியது :
பாலசந்தரை ரசித்தவன், அவரோடு பணியாற்றியவன், அவரது ஆளுமையால் கவரப்பட்டவன், அவரால் வளர்க்கப்பட்டவன் என்ற நன்றியின் அடிப்படையில் இந்தச் சிலையை நிறுவியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்தச் சிலை, பாலசந்தர் என்ற பெருமகனுக்கான மரியாதைக்காக மாத்திரமல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கிராமத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர், குடியரசுத் தலைவரிடமிருந்து தாதா சாகேப் பால்கே விருது பெறுமளவு உயர முடியும் என்பதை உணர்த்தவே இந்தச் சிலை.
86 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு ஒரு குழந்தை பிறந்த போது, தலைக்கு மேலே உள்ள நட்சத்திரம் அறிந்திருக்காது} தமிழ் சினிமாவுக்கு ஒரு மாற்று சினிமா தர வந்த ஒரு மகா கலைஞன் இங்கே பிறந்திருக்கிறான் என்று.
உறவினர்கள் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்} தாதா சாகேப் பால்கே விருது பெற உள்ள பிள்ளை பிறந்திருக்கிறது என்று. கலை உலகம் அறிந்திருக்காது } ரஜினி, கமல் போன்ற கலைஞர்களை தமிழ் மண்ணுக்குத் தரப்போகும் மகா கலைஞன் பிறந்திருக்கிறான் என்று. காற்று அறிந்திருக்காது இந்த இடத்தில் தான் கலையாக வந்தவர் சிலையாகப் போகிறார் என்று.
பாலசந்தர் 101 படங்கள் செய்துள்ளார். அதில், முதல் படத்துக்கும், கடைசி படத்துக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சரியமளிக்கிறது. முதல் படம் } நீர்க்குமிழி. கடைசி படம் } பொய். இந்த உடல் நீர்க்குமிழி போன்றது, உடைந்து போகும், மரணம் நிச்சயம் என்பதையே உணர்த்துகிறது. எனவே, மூப்பு இல்லாத சிலையாகுமாறு வாழ்ந்திட வேண்டும் என்பதே அவர் நமக்குத் தந்துள்ள செய்தி. அவரது கடைசி படம்} பொய். பொய்யிலிருந்து மெய்யைக் கண்டுபிடிப்பவன் கலைஞன். இந்த பிரபஞ்சம் மாயாலோகம் என்றால் மாயாலோகத்தில் எதார்த்தம் எது என்பதைக் கண்டறிபவன் கலைஞன்.
அந்த வகையில் பாலசந்தர் மகா கலைஞன். திரைத்துறையில் வெற்றி பெறுவது என்பது புல்லின் மீது நடந்து சென்று பூ பறிப்பது அல்ல. முள்ளின் மீது நடந்து சென்று தேன் எடுப்பதை போன்றது. பாலசந்தர் திரை உலகுக்கு வந்த போது நிறுவனங்கள் தான் திரையுலகை ஆண்டன.
அடுத்ததாக நடிகர்களின் ஆதிக்கம், இயக்குநர்களின் ஆதிக்கம், தயாரிப்பாளர்களின்ஆதிக்கம் என அடுக்கடுக்கான ஆதிக்கங்கள் இருந்த காலம். தயாரிப்பு என்ற கோட்டையை உடைத்து, நிறுவனங்கள் என்ற எல்லையைத் தாண்டி, நடிகர்கள் என்ற ஒரு பெரும் சுவரைத் தாண்டி, நட்சத்திர ஆதிக்கத்தை எல்லாம் தாண்டி ஒருவர் புகழ்கொடி நாட்டியுள்ளார் என்றால் அது சாதனையின் சிகரம்.
திரைத் துறையில் மூடநம்பிக்கையை உடைத்த முன்னோடி அவர். தனது முதல் படத்துக்கு அவர் வைத்த பெயர் நீர்க்குமிழி. இலை விழுந்தால், அலை மோதினால், மூச்சுப்பட்டால், காற்றுத் தட்டினால் உடைந்து போகக் கூடியதும் உலகிலேயே தாற்காலிகமானதுமான நீர்க்குமிழியை தன் படத்துக்குத் தலைப்பாக வைக்கும் துணிச்சல் அந்த மகா கலைஞனுக்கு இருந்தது.
விளிம்பு நிலை மனிதர்கள், மறுக்கப்பட்ட பாத்திரங்கள், வெளிச்சம் விழாத வீடுகளில் விழுந்து, விரிந்து பரந்த மகா கலைஞன் கே. பாலசந்தர் என்றார் கவிஞர் வைரமுத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com