நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு துணைநிலை ஆளுநர் மூலம் பல்வேறு விரும்பத்தகாத செயல்களையும், ஏற்கனவே உளள் மரபுகளை மீறி நேரடியாக நியமனம் செய்துள்ளார்.

ஆளும் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளால் பந்த் உள்ளிட்ட போராட்டம் சட்டவிரோத செயல்கள் அறங்கேற்றப்பட்டுள்ளன.  இதுகுறித்து மத்திய அமைச்சத வெங்கயநாயுடு கருத்து தெரிவித்த  போது, 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை . ஆளுநர் மற்றும் முதல்வருக்கு இடையே நடைபெற்று வரும் பிரச்னையை அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை யார் நியமித்தது.  இந்த விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகிறது.

சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி விவாதித்து துணைநிலை ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க கூடிய பேரவை உறுப்பினர்களை அழைத்து சென்று நேரில் வழங்கி, 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தை ரத்து செய்ய முன்வர வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி இரட்டை வேடம் போட்டு வருகிறார். பாஜகவின் பேச்சாளர் போல் ஜிஎஸ்டியை ஆதரிக்கிறார். மக்கள் மீது வரி வசூலிக்கப்படுவது என்பதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியால் அதிகமாக 400 கோடி ரூபாய் அளவில் வரி கிடைக்கும் என கூறிவருகிறார். மத்திய அரசுக்கு ஆதரவாக தவறான கருத்துகளை கூறி வருகிறார்.

சுயநிதி கல்லூரி நிகர்நிலை கல்லூரியாக இருந்தாலும் சரி 50 சதவீட இடஒதுக்கீட்டடை பெற முதல்வரும், ஆளுநரும் முயற்சி எடுக்க வேண்டும். மேலும் ஒரே கல்விகட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். அரசு இடஒதுக்கீட்டில் இடம் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுடைய கல்வியாண்டில் இறுதி ஆண்டில் 2 வருடம் கட்டாயமாக பணி செய்வதை சட்டமாக கொண்டுவர வேண்டும்.

பல்வேறு மக்கள் பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் தான் பொறுப்பு என கூறி மக்களை திருப்பி விட்டு அவர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிடும் செயலில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரி மாநில தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு என்னென்ன சட்டத்திட்டங்கள் உள்ளன,  எங்களுக்கு உள்ள அதிகாரம் என்ன என்பது குறித்து ஆளுநர் தெரிவிக்க வேண்டும்.

மீனவர்களுக்கு ஈமச்சடங்கு பணம் கொடுக்கப்படவில்லை. பொருந்தலைவர் காமராஜர் வீடுகட்டும் திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகாலமாக கணவனை இழந்த விதவைகளுக்கு பென்ஷன் வழங்கவில்லை. மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை. அனைத்து கோப்புகளிலும் ஆளுநர் கிரண்பேடி கையெழுத்து போடாமல் உள்ளார்.

வீண் விளம்பரத்திற்காக ஆளுநர் ஆய்வு சென்ற இடங்களில் தற்போது என்ன செய்யப்பட்டுள்ளது. என்ன செய்யவில்லை என்பது குறித்து அடுத்த வாரத்தில் இருந்து வாரத்திற்கு ஒரு நாள் ஆளுநருக்கு கடிதம் அனுப்ப உள்ளேன் என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com