செல்லிடப்பேசி இணைப்புகளுக்கும் ஆதார் கட்டாயமா?: பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என புகார்

செல்லிடப்பேசி இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முனைப்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், பாதுகாப்பு விஷயங்களில் செல்லிடப்பேசி
செல்லிடப்பேசி இணைப்புகளுக்கும் ஆதார் கட்டாயமா?: பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என புகார்

செல்லிடப்பேசி இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முனைப்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், பாதுகாப்பு விஷயங்களில் செல்லிடப்பேசி நிறுவனங்கள் உறுதியளிக்கவில்லை எனக்கூறி ஆதாரை இணைக்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. முதன்முதலாக ஆதார் அமலுக்கு வந்தபோது ஆதார் கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், மத்திய அரசு எரிவாயு இணைப்பு பெறுவோருக்கு மானியம் வழங்க, வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதற்காக, வங்கி கணக்குகளில் ஆதார் இணைக்கப்பட்டது. ஆதார் விஷயத்தில், தனி நபரின் சுயவிவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015- இல் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஆதார் கட்டாயமில்லை. கட்டாயமாக்கக்கூடாது என நீதிமன்றமும் தெரிவித்திருந்தது. அதன்பிறகு, மத்திய அரசு, ஆதார் எண் இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஆதாரை கட்டாயமாக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
எதிர்ப்பலையா?: ஆதார் கட்டாயமா அல்லது கட்டாயம் இல்லையா எனும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், எரிவாயு மானியம், ரேஷன் அட்டை , வங்கிக் கடன் பெறுதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. அதைப்போலவே, ஜூலை 1 ஆம் தேதி முதல் பான் அட்டையுடன் ஆதார் இணைக்கவேண்டும் எனும் நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது.
இதனால், பொதுமக்களும் ஆதார் எண் சில விஷயங்களுக்கு கட்டாயமாக்கப்படுவதை ஒரு வகையில் வரவேற்றாலும், சுய விவர, உரிமை சார்ந்த விஷயங்களில் எந்தளவுக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதில், உத்தரவாதமும் அளிக்கப்படாததால் இந்த விஷயத்தில் சந்தேக மனநிலையிலேயே உள்ளனர்.
செல்லிடப்பேசி இணைப்புக்குமா?: இந்நிலையில், நாடு முழுவதும் செல்லிடப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கோடிக்கணக்கானோர் பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனத் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கு, இருப்பிடம், அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு சான்றை சமர்ப்பிக்க வேண்டியதுள்ளது. ஆனால், ஏற்கெனவே உள்ள செல்லிடப் பேசி இணைப்புகளுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் தேவை என மத்திய தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
ஆதார் பதிவுக்கு குறுஞ்செய்தி: இதைத் தொடர்ந்து, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆதார் எண்ணைக் கட்டாயம் பெறுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. அவ்வகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடோபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. அதுபோல், வாடிக்கையாளர் சேவை எண்ணிலும் தெரிவித்து வருகிறது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (ட்ராய்) அதிகாரி ஒருவர் கூறியது: செல்லிடப்பேசி பயன்படுத்துவோர், புதிய இணைப்பு பெறுவோருக்கு ஆதார் எண் பெறப்பட்டு வருகிறது.
இ- கேஒய்சி: அதுபோல், ஒரு நபரின் அடையாளச் சான்று, முகவரிச் சான்றுகளை வைத்து, பல இணைப்புகளை எடுத்து தவறான முறையில் பயன்படுத்துவோரைக் கண்டறியவும், செல்லிடப்பேசி சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை தடுக்கவும் , உரிய நபர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் ஆதார் பயன்படும். இதற்காக, இ-  கேஒய்சி (  E-KNOW YOUR CUSTOMER) ) அடிப்படையில் ஆதார் எண் பெறப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இது குறித்து தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பிரதிநிதி ஒருவர் கூறியது: செல்லிடப்பேசி இணைப்புகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாளும் விதத்தில் நம்பகத்தன்மை இல்லை.
இதற்கு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்தவகையில் உத்தரவாதம் அளிக்கும் என்பதை குறிப்பிடவில்லை. மேலும், செல்லிடப்பேசி இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைக்கும் விஷயத்தில் அரசின் எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே ஆதார் எண் கட்டாயம் குறித்து அரசு விளக்கமளித்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com