ரூ.10- க்கு 225 மி.லி. ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்

ஏழை மக்களுக்கு ஏதுவாக ரூ.10 விலையில் 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
ரூ.10- க்கு 225 மி.லி. ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்

ஏழை மக்களுக்கு ஏதுவாக ரூ.10 விலையில் 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:
ஏழை மக்கள் சத்துள்ள பால் அருந்திட ஏதுவாக ரூ.10 விலையில் 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை மாநகரில் நுகர்வோர் நலனுக்காக ரூ.5.70 கோடி செலவில் 115 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் பாலகங்களாக மாற்றி அமைக்கப்படும்.
விலையில்லா பால்: இணையம், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 5,439 பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் விலையின்றி வழங்கப்படும்.
ஐஸ்கிரீம் தொழிற்சாலை: சேலத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். விருதுநகர் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறன்கொண்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களில் தலா 3 புதிய பாலகங்கள் வீதம் 12 பாலகங்கள் ரூ.3 கோடியில் அமைக்கப்படும்.
தஞ்சாவூர் ஒன்றியத்தில் புதிய கால்நடை தீவன சேமிப்பு அறை மற்றும் பட்டுக்கோட்டை பால் குளிரூட்டு நிலைய கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் ரூ.1.16 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலை பால்பண்ணை மற்றும் பால்பவுடர் தொழிற்சாலைக்குத் தேவையான புதிய உபகரணங்கள் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். அம்பத்தூர் பால்பண்ணைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மாதவரம் பால் பண்ணைக்குத் தேவையான புதிய கொதிகலன்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.2.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிப்பு, 5 புதிய அதிவிரைவு பேக்கிங் இயந்திரங்கள் மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு பால் குளிர்விப்பு அறை ஆகிய பணிகள் ரூ.6.76 கோடியில் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com