ஜூலை 27 முதல் காவலர் உடல் தகுதித் தேர்வு 15 இடங்களில் நடைபெறுகிறது

காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜூலை 27- ஆம் தேதி முதல் தமிழகத்தில் 15 இடங்களில் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம்

காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜூலை 27- ஆம் தேதி முதல் தமிழகத்தில் 15 இடங்களில் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல்துறையில் உள்ள 13137 இரண்டாம் நிலைக் காவலர்கள், 1015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், 1512 தீயணைப்புப் படை வீரர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21- ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 410 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்கு 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 4.82 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் சுமார் 1.5 லட்சம் பேர் பெண்கள். 50 திருநங்கைகளும் தேர்வு எழுதினர். எழுத்து தேர்வு முடிவு கடந்த 7- ஆம் தேதி வெளியிடப்பட்டது.
15 இடங்களில் உடல் தகுதி தேர்வு: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இம் மாதம் (ஜூலை) 27- ஆம் தேதி முதல் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், தருமபுரி, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர்,திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 15 இடங்களில் நடைபெறுகிறது.
இங்கு, உடல் கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் போட்டிகள் நடைபெறும்.
இந்த தேர்வு அந்தந்த பகுதி சரக டி.ஜ.ஜி தலைமையில் நடைபெறும். தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் சேர்க்கை எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com