வரி போதும்-  லாபம் வேண்டாம்: ஸ்டாலின் கூறிய வாட்ஸ்- அப் காமெடி

ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்கும் பணம் போதும், லாபம் வேண்டாம் என வணிகர்கள் தெரிவிப்பது போன்ற வாட்ஸ்- அப் நகைச்சுவையை பேரவையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வரி போதும்-  லாபம் வேண்டாம்: ஸ்டாலின் கூறிய வாட்ஸ்- அப் காமெடி

ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்கும் பணம் போதும், லாபம் வேண்டாம் என வணிகர்கள் தெரிவிப்பது போன்ற வாட்ஸ்- அப் நகைச்சுவையை பேரவையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் ராமர் பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள சங்கடங்களை நினைவுபடுத்தி மத்திய அரசு மூலமாக அதனை மாநில அரசு சரி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. ஜி.எஸ்.டி. பற்றி வாட்ஸ்- அப்பில் பல்வேறு கருத்துகள் வருகின்றன.
அதில் ஒன்று. கடை என்னுடையது, முதலீடு என்னுடையது, உழைப்பு என்னுடையது, 10 சதவீத லாபம் என்னுடையது, 28 சதவீத வரி லாபம் மட்டும் அரசுக்கா? லாபம் வேண்டாம். வரியில் இருந்து கிடைக்கும் தொகை மட்டும் போதும் என வாட்ஸ்- அப் செய்திகள் வருகின்றன. இந்தக் கருத்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை ஆதரித்தது நீங்கள்தான் (திமுக) என்றார்.
செங்கோட்டையனின் கருத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், ஜி.எஸ்.டி. மசோதாவை பேரவையில் கொண்டு வந்த போது அதனை தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறினோம். வணிகர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்றோம். ஜி.எஸ்.டி. மசோதாவை நீங்கள் (அதிமுக) அப்போது எதிர்த்தீர்கள். இப்போது ஆதரிக்கிறீர்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி. குறித்து நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் விரிவான விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com