கிண்டி ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறப்பு!

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் புகழ்பெற்ற சங்கப் பெண்புலவர் ஔவையாரின் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று திறந்து வைத்தார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறப்பு!

சென்னை : சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் புகழ்பெற்ற சங்கப் பெண்புலவர் ஔவையாரின் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று திறந்து வைத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சுமார் 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இயற்கையெழில் சூழ அமைந்துள்ள இங்கு, கவர்னர் தங்குவதற்கான மாளிகை,குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் அவர்கள் தனகுவதற்கான அதற்காக பிரத்யேக மாளிகை என தனித்துவமிக்க பல  கட்டுமானங்கள் அமைந்துள்ளன.

சமீபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட இங்கு திருவள்ளுவரின் வெண்கலச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகழ்பெற்ற சங்கப் பெண்புலவர் ஔவையாரின் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று திறந்து வைத்தார். இந்த சிலையில் அமைக்கப்பட்டுள்ள உள்ள ஓலைச் சுவடியில் நாம் எழுதினால், அதன் குரல் வடிவம் நமக்கு கேட்கும் வகையில் சிலைகள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com