இளைய சமூகத்தின் மேம்பாட்டுக்கு வழிகோலியவர் காமராஜர்: புதுவை முதல்வர் புகழாரம்

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் மாணவர்கள் நாளாக கொண்டாடப்பட்டது. 
இளைய சமூகத்தின் மேம்பாட்டுக்கு வழிகோலியவர் காமராஜர்: புதுவை முதல்வர் புகழாரம்

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் மாணவர்கள் நாளாக கொண்டாடப்பட்டது. 

இதற்கான விழா என்.டி மகாலில் இன்று நடைபெற்றது. இயக்குநர் ல.குமார் வரவேற்றார். கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் நரேந்திரகுமார் முன்னிலை வகித்தார். 

காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து முதல்வர் நாராயணசாமி பேசியது:
ஏழை குடும்பத்தில் பிறந்த காமராஜர் 6-ம் வகுப்பு பயிலும் போது தந்தை இறந்து விட்டார். இதனால் பள்ளிப்படிப்பை கைவிட்டு, பொதுவாழ்வில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எம்.எல்.ஏ, எம்.பி, முதல்வர்,. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் என பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்தார். அவரது ஆட்சியில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இளைய சமூகத்தை மேம்படுத்த கல்வியில் சாதனை புரிந்தவர். வேளாண்மை புரட்சி, தொழிற்சாலைகளை நிறுவி பல்வேறு அணைகளை கட்டினார். சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கினார்.

சிறிய கிராமங்களில் கூட பள்ளிகளை நிறுவி மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த பெருமை காமராஜருக்கு உள்ளது. ஊழல், முறைகேடுகள் இல்லாது 9 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். 2 பிரதமர்களை உருவாக்கிய பெருமை கொண்டவர்.  புதுச்சேரி மாநிலத்தின் மீதும் காமராஜர் அளப்பறிய பற்று கொண்டவர்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் நானும், அமைச்சர்களும் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறோம். புதுவையை அழகான நகராக மாற்ற ஏதுவாக ரூ.1850 கோடி செலவில் பொலிவுறு நகர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றோம். மேலும் குடிநீர், புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.1400 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.200 கோடி நிதி வரவுள்ளது. புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டதால் ஏராளமான ஆலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க தொடர்ந்து ஆசிரியர்களிடம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

புதுவைக்கு தற்போது சோதனைக் காலம் வந்துள்ளது. நமது மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என விதிமுறை வந்துள்ளது. இதற்காக மாணவர்களுக்கு படிப்படியாக பயிற்சி தரப்பட்டு வருகிறது. சிறிய மாநிலங்களில் புதுவையை முதன்மையாக திகழச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் புதுவை மாநிலம் 5}வது இடத்தை பெற்றுள்ளது பெருமையைத் தருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தான் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com