ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மற்றும் திட்டப் பதிவு அரசுக் கட்டணம் எவ்வளவு?

ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மற்றும் திட்டப் பதிவுகளுக்கு அரசுக் கட்டணம் எவ்வளவு என்பது குறித்த சிறு குறிப்புகளைப் பார்க்கலாம்.
ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மற்றும் திட்டப் பதிவு அரசுக் கட்டணம் எவ்வளவு?

ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மற்றும் திட்டப் பதிவுகளுக்கு அரசுக் கட்டணம் எவ்வளவு என்பது குறித்த சிறு குறிப்புகளைப் பார்க்கலாம்.

ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) விதிகள், 2016-இன் படி ரியல் எஸ்டேட் திட்ட பதிவுக்கான கட்டணம் விவரங்கள்: 

a) மனைப்பிரிவு, உட்பிரிவு மற்றும் இட அங்கீகாரம்  மனைக்கு ஏற்ற பகுதிக்கு சதுர மீட்டருக்கு ரூ.5 (சாலைகள் மற்றும் திறவெளி நீங்கலாக) [EWS மனைகள் இல்லாமல்]

b) குடியிருப்புக் கட்டிடங்கள் (Residential buildings)

i) தளப்பரப்புக் குறியீட்டில் (FSI) 60 சதுர மீட்டருக்கு குறைவான குடியிருப்புப் பகுதியை கொண்டிருக்கும் அலகுக்கு சதுர மீட்டருக்கு ரூ.10/ 

ii) தளப்பரப்புக் குறியீட்டில் (FSI) 60 சதுர மீட்டருக்கு அதிகமான குடியிருப்புப் பகுதியை கொண்டிருக்கும் அலகுக்கு சதுர மீட்டருக்கு ரூ.20/ 

c) வணிகக் கட்டிடங்கள் (Commercial buildings) : தளப்பரப்புக் குறியீட்டில் (FSI) சதுர மீட்டருக்கு ரூ.50/ 

d) மற்ற கட்டிடங்கள்: தளப்பரப்புக் குறியீட்டில் (FSI) சதுர மீட்டருக்கு ரூ.25/ 

ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் கட்டணம்
தனி நபருக்கு ரூ.25,000/-
மற்றவை     ரூ.50,000/-

பதிவுக் கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி அல்லது கருவூலம்/சார் கருவூலக் கணக்கில் பின்வரும் தலைப்பில் (Head of Account) கட்ட வேண்டும்.

“0217. Urban Development – 60. Urban Development Scheme – 800. Other Receipts – AR. Tamil Nadu Real Estate Appellate Tribunal and Real Estate Regulatory Fund” (0217 60 800 AR 00 03)

*ரசீதின் (Challan) ஒரு பகுதியை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்

(விரிவாக விரைவில்)


C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com