கொடுங்கையூர் தீ விபத்து: தகுந்த உபகரணங்கள் இல்லாததால் தீயணைப்பு வீரர் பலியா? முதல்வர் பழனிசாமி பேட்டி! 

கொடுங்கையூர் பேக்கரி  தீ விபத்தில் தகுந்த உபகரணங்கள் இல்லாததால் தான் தீயணைப்பு வீரர் பலியானார் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொடுங்கையூர் தீ விபத்து: தகுந்த உபகரணங்கள் இல்லாததால் தீயணைப்பு வீரர் பலியா? முதல்வர் பழனிசாமி பேட்டி! 

சென்னை: கொடுங்கையூர் பேக்கரி  தீ விபத்தில் தகுந்த உபகரணங்கள் இல்லாததால் தான் தீயணைப்பு வீரர் பலியானார் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் நேற்றிரவு தீ பிடித்துள்ளது. வெளியில் பரவிய தீயை அணைத்து விட்டு, பேக்கரியின் உள்ளே ஏற்பட்ட தீயை அணைக்க கடையின் கதவை திறந்தபோது, அங்கிருந்த சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அநேக பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது

காயமடைந்த அனைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அவர்களில் ஏகராஜன் என்ற தீயணைப்பு படை வீரர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார். மேலும் பலத்த காயத்துடன் 48 பேர் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்  

இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வருபவர்களை முதல்வர்  பழனிசாமி நேரில் சந்தித்து  ஆறுதல் கூறினனர்.வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

தீ விபத்தில் மரணமடைந்த ஏகராஜன் என்ற தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும்,அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.

அதே போல சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அரசு சார்பில் முறையாக வழங்கப்படும். 

அதே சமயம் கொடுங்கையூர் பேக்கரி  தீ விபத்தில் தகுந்த உபகரணங்கள் இல்லாததால்தான் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார் என்று கூறப்படுவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com